விநாயகர் அகவல்
Vinayagar Agaval — Lyrics in Tamil
"சீதக் களபச் செந்தாமரைப் பூம்" என்று தொடங்கும், ஔவையார் அருளிய விநாயகர் துதி. யோக நெறியின் நுட்பங்களை விநாயகர் அருளால் உணர்ந்ததைப் பாடுகிறது.
Also known as: Vinayagar Agaval · Avvaiyar Agaval · Seetha Kalaba
காப்பு
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவைநாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலம்செய்துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்சங்கத் தமிழ் மூன்றும் தா.
அகவல்
சீதக் களபச் செந்தா மரைப்பூம்பாதச் சிலம்பு பலவிசை பாடப்பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்அஞ்சு கரமும் அங்குச பாசமும்நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்நான்ற வாயும் நாலிரு புயமும்மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞானஅற்புதம் நிறைந்த கற்பகக் களிறே!முப்பழ நுகரும் மூஷிக வாகன!
இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்தாயா யெனக்குத் தானெழுந் தருளிமாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து
குருவடி வாகிக் குவலயந் தன்னில்திருவடி வைத்துத் திறமிது பொருளெனவாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்கோடா யுதத்தால் கொடுவினை களைந்தேஉவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டிஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
தலமொரு நான்கும் தந்தெனக் கருளிமலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தேஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டிஆறா தாரத்(து) அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தேஇடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டிமூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்
குண்டலி யதனிற் கூடிய அசபைவிண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்துமூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்காலால் எழுப்பும் கருத்தறி வித்தேஅமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறிஇடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்எண் முகமாக இனிதெனக் கருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்கருத்தினில் கபால வாயில் காட்டிஇருத்தி முத்தி யினிதெனக் கருளிஎன்னை யறிவித்(து) எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்துவாக்கும் மனமும் இல்லா மனோலயம்தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்னஅருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில்
எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டிஅணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டிவேடமும் நீறும் விளங்க நிறுத்திக்கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டிஅஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னைநெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்டவித்தக விநாயக விரைகழல் சரணே!
பொருள் / விளக்கம்
ஔவையார் அருளிய விநாயகர் அகவல், விநாயகரின் திருவுருவத்தை வர்ணித்துத் தொடங்கி, குருவாக வந்து அவர் அருளிய யோக ஞான அனுபவங்களைப் படிப்படியாக விவரிக்கிறது — ஐந்தெழுத்து, மூலாதாரக் கனல், குண்டலினி, ஆறு ஆதாரங்கள், சதாசிவ தரிசனம் என.
அமைப்பு: வெண்பா வடிவில் ஒரு காப்புச் செய்யுளும், 72 அடிகள் கொண்ட அகவலும் (ஆசிரியப்பா).
பாராயணம்: விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி நாட்களிலும், தினசரி காலை வழிபாட்டிலும் பாடப்படுகிறது. "பாலும் தெளிதேனும்" என்ற காப்புச் செய்யுள் தனியாகவும் பரவலாகச் சொல்லப்படுகிறது.