பதிகம்

கோளறு பதிகம்

Kolaru Pathigam — Lyrics in Tamil

அருளியவர்: திருஞானசம்பந்தர்நூல்: தேவாரம் — இரண்டாம் திருமுறை

"வேயுறு தோளி பங்கன்" என்று தொடங்கும் திருஞானசம்பந்தரின் பதிகம். கோள்களாலும் நாள்களாலும் வரும் தீமைகள் சிவனடியார்களை அணுகாது என்று உறுதி கூறுகிறது. நவக்கிரக தோஷம் நீங்கப் பாராயணம் செய்யப்படுகிறது.

Also known as: Kolaru Thiruppathigam · Veyuru Tholi Pangan · Navagraha Pathigam

பகிர்

வேயுறு தோளி பங்கன்விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவிமாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்ஞாயிறுதிங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனேஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

என்பொடு கொம்பொடாமை இவைமார்பிலங்க எருதேறி யேழை யுடனேபொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்து என் உளமே புகுந்த அதனால்ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொ டுஆறும் உடனாய நாள்கள்அவைதாம் அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

உருவளர் பவளமேனி ஒளிநீ றணிந்து உமையோடும் வெள்ளைவிடைமேல்முருகலர் கொன்றை திங்கள் முடிமேலணிந்து என் உளமே புகுந்த அதனால்திருமகள் கலைய தூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும்அறநெறி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து மறைஓதும் எங்கள் பரமன்நதியொடு கொன்றை மாலை முடிமேல் அணிந்துஎன் உளமே புகுந்த அதனால்கொதியறு காலனங்கி நமனொடு தூதர் கொடு நோய்கள் ஆன பலவும்அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடை ஏறும் நங்கள் பரமன்துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்துஎன் உளமே புகுந்த அதனால்வெஞ்சின அவுண ரோடும் உருமிடியு மின்னும் மிகையான பூதம் அவையும்அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

வாள்வரி அதள தாடை வரிகோவணத்தர் மடவாள் தனோடும்உடனாய்நாண்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால்கோளரி உழுவையோடு கொலையானைகேழல் கொடு நாகமோடு கரடிஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

செப்பிள முலைநன் மங்கை ஒரு பாகமாக விடையேறு செல்வன் அடைவான்ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியாஅப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

வேள்பட விழிசெய்தன்று விடைமேல் இருந்து மடவாள் தனோடும் உடனாய்வான்மதி வன்னி கொன்றை மலர் சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்ஏழ்கடல் சூழிலங்கை அரையன் தன்னோடும் இடரான வந்து நலியாஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

பல பல வேடமாகும் பரன் நாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்மலர்மிசை யோனும் மாலும் மறையோடு தேவர் வருகால மான பலவும்அலைகடல் மேரு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

கொத்தலர் குழலி யோடு விசையற்கு நல்கு குணமாய் வேட விகிர்தன்மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்புத்தரொடு அமணை வதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமேஅத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

தேனமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழநான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான முனிவன்தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய்ஆனசொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.

திருச்சிற்றம்பலம்

பொருள் / விளக்கம்

மதுரைக்குப் புறப்பட்ட திருஞானசம்பந்தரை, "நாளும் கோளும் சரியில்லை" என்று திருநாவுக்கரசர் தடுத்தபோது, சிவபெருமான் உள்ளத்தில் இருக்கும்போது கோள்கள் எல்லாம் நல்லவையே என்று சம்பந்தர் பாடியதாக மரபு கூறுகிறது.

ஒவ்வொரு பாடலின் நிறைவும்: "நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே" — சிவனடியார்களுக்கு அவை எல்லாம் மிகவும் நல்லவையே.

பாராயணம்: கிரக தோஷம், சனிப் பெயர்ச்சி, ராகு–கேது பெயர்ச்சி காலங்களில் தினமும் பதினொரு பாடல்களையும் சொல்வது வழக்கம்.